Saturday 7 January 2017

அக்கார அடிசில்

அக்கார அடிசில்
தேவையானவை:
பச்சரிசி - அரை கப்
 பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 பால் - 2 + 1 கப்
 தண்ணீர் - அரை கப்
 வெல்லம் - அரை கப்
 சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
 நெய் - கால் கப் + 1 டேபிள்ஸ்பூன்
 ஏலக்காய் - 1
 முந்திரி - 6
 குங்குமப்பூ - 3 நரம்பு

செய்முறை:
குங்குமப்பூவை ஒரு டேபிள்ஸ்பூன் பாலில் ஊறவிடவும். குக்கரை அடுப்பில் வைத்து 1 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு முந்திரியை உடைத்து சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுத்து தனியாக வைக்கவும். அதே குக்கரில் அரிசி, பருப்பை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து மிதமான தீயில் வறுத்து பிறகு பால், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் மூடிப்போட்டு மூன்று விசில் வரை வேகவிடவும். குக்கரின் உள்ளே ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சமைப்பதாக இருந்தால் ஐந்து விசில் வரை வேகவிடவும். அரிசி-பருப்பு நன்கு வெந்ததும் மசித்து விடவும். இத்துடன் மீதமிருக்கும் 1 கப் காய்ச்சிய பாலைச் சேர்த்து மசித்து, அடுப்பில் வைத்து வேகவிடவும். பிறகு, 2 டேபிள்ஸ்பூன் நெய், தூளாக்கிய வெல்லம் சேர்த்து வெல்லம் கரைய கலக்கவும்.மேலும் 2 டேபிள்ஸ்பூன் நெய், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும். தீயை மிதமாக்கிக் கொள்ளவும். 4 நிமிடங்கள் வரை கிளறி, குங்குமப்பூ ஊறிய பாலை குங்குமப்பூவோடு சேர்த்து,மேலும் 2 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி கிளறிவிடவும்.இரண்டு நிமிடங்கள் கைவிடாமல் கிளறி, இறுதியாக 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.



No comments:

Post a Comment