Sunday 20 November 2016

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு

தேவையானவை:

 பால் சுறா - 200 கிராம்

 பூண்டு - 4 பல்

 சீரகம் - ஒரு டீஸ்பூன்

 கறிவேப்பிலை - சிறிது

 கடுகு - ஒரு டீஸ்பூன்

 உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - 2 சிட்டிகை

 உப்பு - தேவையான அளவு

 இஞ்சி - சிறிய துண்டு

 நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை:

பால் சுறாவை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவிக்கொள்ளவும். இட்லி பாத்திரத்தில் மீன் துண்டுகளை வைத்து ஆவியில் வேகவைத்தெடுக்கவும் (மீனைத் தண்ணீரில் போட்டு வேகவைத்தால் குழைந்துவிடும்). நன்றாக வெந்ததும் ஆறவிட்டு உதிர்த்துக்கொள்ளவும். இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும்  கடுகு தாளித்து, சீரகம், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்கவும். உளுத்தம்பருப்பு சிவந்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டைச் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் உதிர்த்த மீன், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். குறைந்த தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து  பிறகு இறக்கி சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு:

பால் சுறா, பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் சுரப்பை அதிகரிக்கும். ஏற்கெனவே அதிக பால்சுரப்பு உள்ள தாய்மார்கள் இதை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டாம். பால் பற்றாமல் இருக்கும் தாய்மார்கள் வாரம் இருமுறை செய்து சாப்பிட ஏற்ற உணவு இது.

No comments:

Post a Comment