Saturday 8 October 2016

சிம்லி உருண்டை

சிம்லி உருண்டை

சிம்லி உருண்டை

 

தேவையானவை: கேழ்வரகு மாவு  2 கப், எள்  ஒரு கப், வேர்க்கடலை  ஒரு கப், துருவிய வெல்லம்  ஒரு கப், ஏலக்காய் 4,நெய்  சிறிது

 

செய்முறை: கேழ்வரகு மாவைக் குறைந்த தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும். எள், ஏலக்காய், வேர்க்கடலை ஆகியவற்றையும் தனித்தனியாக வறுத்து வைக்கவும். கேழ்வரகு மாவில் தண்ணீர் கலந்து மிருதுவாகப் பிசைந்து இரண்டு அல்லது மூன்று சிறிய உருண்டைகளாக உருட்டவும். அடுப்பில் தவாவை வைத்து குறைந்த தீயில் சூடாக்கி... மாவு உருண்டையை தவாவின் நடுவில் வைத்து தட்டையாக்கி திக்கான ரொட்டி சைஸுக்கு அழுத்தி, ரொட்டியின் இரண்டு புறமும் எண்ணெய் தடவி ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும். அவ்வப்போது ரொட்டியின் மீதும், ரொட்டியைச் சுற்றியும் லேசாக எண்ணெய் விடவும். ரொட்டி கடினமாக ஆகக்கூடாது. ரொட்டியின் மீது வெள்ளை கலர் புள்ளியோ, பிரவுன் கலர் புள்ளியோ வரக்கூடாது. இப்படி அனைத்து உருண்டைகளயும் ரொட்டிகளாகச் சுட்டு... இளம்சூடாக இருக்கும்போதே உள்ளங்கையில் நெய் தடவிக்கொண்டு ரொட்டியை நொறுக்கி மிக்ஸியில் மையாக அரைக்கவும். எள்ளையும், வேர்க்கடலையையும் தனித்தனியாக‌ மிக்ஸியில் போட்டு அரைத்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்து  துருவிய வெல்லம், ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும். பிறகு, கையில் நெய் தடவிக் கொண்டு சின்னச்சின்ன உருண்டைகளாக உருட்டி காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

 

 

No comments:

Post a Comment