Thursday 6 October 2016

இலை அப்பம்

இலை அப்பம்

இலை அப்பம்

 

தேவையானவை:

 

பச்சரிசி மாவு - 500 கிராம்

பலாச்சுளைகள் - 300 கிராம்

வாழை இலை - 3 இலை

 

ஸ்டஃபிங் செய்ய:

பலாச்சுளைகள் - 5

(பொடியாக நறுக்கவும்)

தேங்காய் - 1 மூடி

(துருவிக் கொள்ளவும்)

வெல்லம் - 150 கிராம்

ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்

 

செய்முறை:

 

ஸ்டஃபிங் செய்யக் கொடுத்தவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும். மிக்ஸியில் பலாச்சுளைகளைச் சேர்த்து, தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இதை பச்சரிசி மாவில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு, மிருதுவான‌ சப்பாத்தி மாவாகப் பிசையவும். இதை சின்னச்சின்ன‌ உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். வாழை இலையை சதுரமாக நறுக்கி, இதன் நடுவில் பலாப்பழ உருண்டையை வைத்து விரல்களால் தட்டையாக்கவும். ஸ்டஃபிங் கலவையில் சிறிது எடுத்து நடுவில் வைத்து, வாழை இலையால் மூடி, இட்லித் தட்டில் வைக்கவும். பத்து நிமிடம் இட்லிக் கொப்பரையில் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்.

 

 

No comments:

Post a Comment