Wednesday 28 September 2016

கேரளா கறிமீன் வருவல்

கேரளா கறிமீன் வருவல்

கேரளா கறிமீன் வருவல்

 

தேவையானவை:

 

 கேரளா கறிமீன் - ஒன்று (200 – 250 கிராம் எடையுள்ளது)

 

 பெரியவெங்காயம் - 2

 

 தக்காளி - ஒன்று

 

 குடமிளகாய் - ஒன்று

 

 வெங்காயத்தாள் - அரை கப்

 

 பூண்டு - 10 பல்

 

 இஞ்சி - ஒரு துண்டு

 

 சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

 

 ஸ்வீட் சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்

 

 உப்பு - தேவையான அளவு

 

 காஷ்மீரி மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 

 மீன் வறுவல் மசாலாத்தூள் - 10 கிராம்

 

 வாழை இலை - ஒன்று

 

 சூரியகாந்தி எண்ணெய் - 50 மில்லி

 

செய்முறை:

 

முழுமீனைக் கழுவி அதன் மேல் மற்றும் அடிப்பகுதியில் ஆங்காங்கே கீறி விடவும். மீன் வறுவல் மசாலாத்தூளை மீன் மேல் முழுவதுமாகத் தடவி, அரை மணி நேரம் ஊற வைக்கவும். மீன் நன்கு மசாலாவில் ஊறியவுடன் வாணலியில் எண்ணெய் சேர்த்து, அதில் பொரித்து எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், தக்காளி, வெங்காயத்தாள், பூண்டு மற்றும் இஞ்சியை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். இத்துடன் ஸ்வீட் சில்லி சாஸ், சோயா சாஸ், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து ஒரு வதக்கு வதக்கி எடுக்கவும்.

 

பிறகு, வாழை இலையில் மீனை வைத்து, வதக்கிய கிரேவியை மீனின் இருபுறமும் தடவிக் கொள்ளவும். இலையால் மீனை மூடி, இட்லித் தட்டில் 5 நிமிடங்கள் வேகவைத்து விடவும். இலை சற்று நிறம் மாறியதும் எடுத்துப் பரிமாறவும்.

No comments:

Post a Comment