Saturday 24 September 2016

மூங்கில் அரிசி இட்லி

மூங்கில் அரிசி இட்லி

மூங்கில் அரிசி இட்லி

தேவையானவை:

 

மூங்கில் அரிசி  3 கப்

 

இட்லி அரிசி  ஒரு கப்

 

உளுந்து  ஒரு கப்

 

வெந்தயம்  ஒரு டீஸ்பூன்

 

உப்பு  தேவையான அளவு

 

செய்முறை:

 

மூங்கில் அரிசி, இட்லி அரிசியை தனித்தனியாக தலா 4 மணி நேரமும் ஊற வைக்கவும். உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, 2 மணி நேரம் ஊற விடவும். கிரைண்டரில் உளுந்து மற்றும் வெந்தயக் கலவையைச் சேர்த்து அரைத்தெடுத்து வைக்கவும். பிறகு மூங்கில் அரிசி மற்றும் இட்லி அரிசியை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். இனி, அரைத்தவற்றை எல்லாம் நன்கு கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கி, 6 மணி நேரம் புளிக்க விடவும். பிறகு, வழக்கமாக நாம் இட்லி அவிப்பது போல இட்லிப் பாத்திரத்தில் மாவை ஊற்றி வேகவைத்து எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.

No comments:

Post a Comment